இந்திய ராணுவம், ஸ்மார்ட்ஃபோனில் இருந்து 89 செயலிகளை நீக்க வேண்டும் என்று ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய- சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் முகநூல், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர், ஹலோ சாட் உள்ளிட்ட 59 சீன ஆப்ஸுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.