வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ”மதரசா என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. மதரசாவில் படித்தால் டாக்டராக, இன்ஜினியராக முடியாது என்றால், யாரும் அதில் சேர மாட்டர்,” என, பா.ஜ.,வை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
|
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில், ஹிந்தியில் வெளியாகும், ‘பாஞ்சஜன்யா’ மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும், ‘ஆர்கனைசர்’ வார இதழ்கள் சார்பில், டில்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.,வை சேர்ந்த, வடகிழக்கு மாநிலமான அசாமின் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியதாவது:முஸ்லிம்கள் நடத்தும் மதரசாக்களில், மதக் கல்வியே வழங்கப்படுகிறது.
சிறு வயதிலேயே குழந்தைகளை கட்டாயப்படுத்தி, இந்தப் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். இது, மனித உரிமை மீறலாகும். தாங்களாகவே தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய வயதில் தான், மதக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.மதரசா என்ற வார்த்தையே இருக்கக் கூடாது.
|
மதரசாக்களில் படித்தால், எதிர்காலத்தில் டாக்டராக, இன்ஜினியராக முடியாது என்று கூறப்பட்டால், யாரும் மதரசாக்களில் சேர மாட்டர். அனைத்து குழந்தைகளுக்கும், அறிவியல், கணிதம் உட்பட, நவீன கல்வியை கற்க வாய்ப்பு தர வேண்டும். மதம் தொடர்பாக வீடுகளில் பயிற்சி அளிக்கலாம். அனைத்து முஸ்லிம்களும், ஏதாவது ஒரு காலகட்டத்தில், ஹிந்துக்களாக இருந்தவர்கள் தான்.இவ்வாறு, அவர் பேசினார்.அவருடைய இந்தப் பேச்சு, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement