வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. காங்கிரசை பலப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து, கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை கேட்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
|
இந்த மாநாடு முடிந்ததும், காங்., இடைக்கால தலைவர் சோனியா பல முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார். இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், காங்கிரசின் தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தவிர, காங்., காரியக் கமிட்டி உறுப்பினர்களும் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர். இதுவரை காங்., தலைவர் தான், இந்த உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார்.காங்கிரசின் செயல் தலைவராக ஒருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இது, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையாம். இந்த பதவிக்கு கமல்நாத் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.
|
ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். எனவே, அடுத்த சீனியராக இருக்கும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. இவர், சோனியா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அடுத்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, காங்கிரசில் ஏற்கனவே கோஷ்டி பூசல் உள்ளது. இம்மாநிலத்தில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வராக விரும்புகிறார்.
Advertisement