Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்``அடுத்த 10 வருடங்களுக்கு..." - வில் ஸ்மித் மீது ஆஸ்கர் எடுத்திருக்கும் நடவடிக்கை! |Academy Bans...

“அடுத்த 10 வருடங்களுக்கு…” – வில் ஸ்மித் மீது ஆஸ்கர் எடுத்திருக்கும் நடவடிக்கை! |Academy Bans Will Smith From Attending Oscars for the Next 10 Years

வில் ஸ்மித் மீது ஆஸ்கர் விதித்திருக்கும் தடை அதிர்ச்சியை அளிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 94-வது ஆஸ்கர் விருதுகள் விழாவில் வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாதமி அமைப்பு வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆஸ்கர் விழாக்களில் கலந்துகொள்ள அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறார்கள்.

பரபரப்பான சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் ஆஸ்கர் அமைப்பின் தலைவர் டேவிட் ரூபின் மற்றும் நிர்வாக அதிகாரி டான் ஹட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஏப்ரல் 8, 2022 முதல் அடுத்த பத்தாண்டுகளுக்கு எந்தவித ஆஸ்கர் விழாவிலும் நேரிலோ ஆன்லைன் வழியாகவோ வில் ஸ்மித் கலந்துகொள்ள தடை விதிப்பதென அமைப்பில் முடிவு செய்திருக்கிறோம். இந்த தடை அவர் விருதுகளுக்கு நாமினேட் செய்யப்படுவதற்குப் பொருந்தாது” எனத் தெரிவித்து இருக்கிறார்கள்.

கிறிஸ் ராக், வில் ஸ்மித்

கிறிஸ் ராக், வில் ஸ்மித்
Chris Pizzello

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் மருத்துவக் குறைபாட்டை நகைச்சுவையாக தொகுப்பாளர் கிறிஸ் ராக் பேச, அதனால் கோபமடைந்த வில் ஸ்மித் அவரை விழா மேடையிலேயே தாக்கிய சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதற்கு முன்பு வில் ஸ்மித் ஆஸ்கர் அமைப்பிலிருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments