Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்அணையின் சுவர் மீது ஏறிய இளைஞர் காயம்| Dinamalar

அணையின் சுவர் மீது ஏறிய இளைஞர் காயம்| Dinamalar

சிக்கபல்லாபூர், இளைஞர் ஒருவர், அணை மீதேறி சாகசம் செய்த போது, கால் தவறி கீழே விழுந்தார்.சிக்கபல்லாபூரின், கவுரி பிதனுரை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று முன்தினம் மாலை, சிக்கப்பல்லாபூரின் சீனிவாச சாகரா அணைக்கு வந்திருந்தார். விடுமுறைநாள் என்பதால், சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர்.இவர்கள் முன்னிலையில் சாகசம் செய்து, கை தட்டல் வாங்க வேண்டுமென விரும்பிய அவர், எந்த பாதுகாப்பு வசதிகளையும் செய்யாமல், அணையின் சுவர்களில் ஏறத்துவங்கினார். எந்த பிடிப்பும் இன்றி, பாதிக்கும் மேல் ஏறிய அவர், அங்கிருந்து கீழே விழுந்தார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.இளைஞர் மேலே இருந்து விழும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. சிக்கபல்லாபூர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments