Friday, July 1, 2022
Homeஅரசியல் செய்திகள்அதானி குழுமத்தை முன்வைத்து இலங்கையில் தீவிரமாகும் போராட்டம்... பின்னணி என்ன?!| Why Srilankan People Protesting...

அதானி குழுமத்தை முன்வைத்து இலங்கையில் தீவிரமாகும் போராட்டம்… பின்னணி என்ன?!| Why Srilankan People Protesting Against Adani?

மறுத்த கோத்தபய… வாபஸ்பெற்ற ஃபெர்டினாண்டோ!

அடுத்த நாளே, இந்தக் கருத்துகள் அனைத்தும் தவறானவை என்று மறுப்புத் தெரிவித்தார் கோத்தபய. அன்றிரவே, `மன அழுத்தத்தில் பொய்யான தகவல்களைக் கூறிவிட்டேன்’ என்று கருத்துகளை வாபஸ் பெற்றார் ஃபெர்டினாண்டோ. அடுத்த இரண்டு நாள்களில், `சொந்தப் பிரச்னை காரணமாகப் பதவி விலகுகிறேன்’ என்று சொல்லி மின் வாரிய தலைவர் பதவியை ராஜினாமாவும் செய்துவிட்டார் அவர். இந்த விவகாரத்தை இரு நாட்டின் எதிர்க்கட்சிகளும் கையிலெடுத்து அரசுக்கு எதிராகக் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

டிரெண்டிங்கில் #StopAdani ஹேஷ்டேக்!

இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, இலங்கை மக்கள் அனைவரும் #StopAdani என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அதானி குழுமத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டனர். இதையடுத்து, இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. மேலும், ஜூன் 16-ம் தேதி அன்று, இலங்கைத் தலைநகர் கொழும்பிலுள்ள மெஜஸ்டி பகுதியில் ஒன்றுகூடி, அதானிக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

கோத்தபய - அதானி - மோடி

கோத்தபய – அதானி – மோடி

“வெளிநாட்டைச் சேர்ந்த அதானிக்கு ஏன் இலங்கையின் மின் திட்டங்களை டென்டர்கூட விடாமல் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுப்பதால், நம் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும். மேலும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி முறையும் சீர்குலைந்துவிடும். இது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதானி குழுமம் இலங்கையில் கால்பதிக்கக் கூடாது!” என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடி மக்கள் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்துக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். தற்போது இலங்கையில் அதானி குழுமம் கால்பதிக்க எதிர்ப்புகள் கிளம்பியிருப்பது, அந்தக் குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments