Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்அதிகளவில் புகார்கள்.. கால் டாக்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை| Dinamalar

அதிகளவில் புகார்கள்.. கால் டாக்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ‘ஓலா, ஊபர்’ போன்ற வாடகை கார் சேவை நிறுவனங்கள் மீது, நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து, மத்திய அரசு அந்நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்து, நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளதாவது: வாடகை கார்களுக்கான தளங்கள், நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சவாரி ரத்து செய்வது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, இத்துறை சார்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடைபெற்றது.

latest tamil news

இதில் ‘ஓலா, ஊபர், மேரு, ரேப்பிடோ’ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கலந்துகொண்டன. சந்திப்பின் போது, புகார்கள் மற்றும் அவை சம்பந்தமான புள்ளிவிபரங்கள் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டன.

இக்குறைகளை களைவதற்கான முயற்சிகளை எடுக்காவிட்டால், மிகக் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் அரசு சிறிதளவுகூட சமரசம் செய்துகொள்ளாது என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments