சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியை சேர்ந்தவர் முத்து (48). இவர் இருசக்கர வாகன பழுது நீக்க கடை நடத்தி வந்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இவருடைய மகனான சந்தோஷ் மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஓ .வெ. செ. பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடைபெற்று இருப்பதால் பரீட்சைக்கு சென்று வந்துள்ளார்.
மனம் தளராமல் +2 தேர்வு எழுதிய மாணவன்
இன்று காலை தந்தை மரணம் அடைந்ததை ஒட்டி தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்துவிட்டு இன்று நடக்கும் இயற்பியல் தேர்வுக்கு சந்தோசை உறவினர்கள் பைக்கில் சென்று விட்டனர். ஒரு பக்கம் தந்தைக்கு உடல் அருகே இருக்க முடியமாலும் பள்ளி பொது தேர்வையும் எழுத வேண்டும் இரண்டுமே ஒரே நேரத்தில் செய்வதறியமால் கடமையாற்ற சென்ற சந்தோசை உறவினர்கள் ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் : சிதம்பரநாதன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.