Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்அதிமுக புள்ளி மீது பணமோசடி புகார் - அண்ணன் மீதே புகார் கொடுத்த தம்பி -...

அதிமுக புள்ளி மீது பணமோசடி புகார் – அண்ணன் மீதே புகார் கொடுத்த தம்பி – நடந்தது என்ன? | virudhunagar admk brothers petition in cheating case

இதுபோக பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கிற மேட்த்ஸ், கெமிஸ்ட்ரி ப்ரொஃபஸர், டிரைவர், கிளரிக்கல், ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஆவின்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கும் ஆட்கள் கூட்டிட்டு வாங்க நாம வேலை ஏற்பாடு பண்ணித்தரலாம்னு எங்க அண்ணி உறுதி கொடுத்தாங்க.

ஏன்னா, பேராசிரியர் காலிப்பணியிடங்கள், டி.என்.எஸ்.இ.டி.(டேன்செட்) தேர்வு, ஆவின்துறை காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறப்பொறுப்பு மதர்தெரசா பல்கலைக்கழகத்துக்கு இருந்துச்சு. அதனால நிறைய முறைகேடுகள் நடந்துச்சு. எங்க அண்ணியார் சொன்னத வச்சி, விஜய் நிறைய பேர்கிட்ட பேசி மத்த காலிப் பணியிடங்களுக்கும் ஆள் சேர்த்தார்.

விஜய நல்லதம்பி

விஜய நல்லதம்பி

அப்படிதான், ஸ்ரீஜா என்பவருக்கு கெமிஸ்ட்ரி உதவி பேராசிரியர் பணிக்கு ரூ.20 லட்சம், சத்யா என்பவருக்கு கணித உதவி பேராசிரியர் பணிக்கு 25 லட்சம்னு மொத்தம் 45 லட்சத்தை 2017, டிசம்பர் மாசம் ராமுதேவன்பட்டில வச்சி எங்க அண்ணன் ரவிச்சந்திரன், அண்ணி வள்ளிக்கிட்ட குடுத்தோம். ஆபிஸ் அசிஸ்டன்ட் பணிக்கு ஜெனிபர் ராபின் ரூ.4 லட்சம், சந்திரா கருப்பையா ரூ.5 லட்சம், கிருஷ்ணம்மாள் ரூ.5 லட்சம், சுகன்யா ரூபன் ரூ.5 லட்சம், கீர்த்தனா முருகன் ரூ.4 லட்சம், பஞ்சாயத்து கிளார்க் வேலைக்கு ரூ.12 லட்சம்னு 2018 ஜனவரி முதல் மார்ச் மாசம் வரையிலும் பல தவணையா எங்க அண்ணன் ரவிச்சந்திரன் கிட்ட கொடுத்தோம். மொத்தம் ரூ.95 லட்சம் வாங்கி கொடுத்திருக்கேன். அப்போலாம் எங்க அண்ணி வள்ளியும் இருந்தாங்க”.

ரவிச்சந்திரன்

ரவிச்சந்திரன்

ஆனா அதுக்கப்புறம் காலிப்பணியிட நியமனத்துல பிரச்னையாகி கோர்ட்டுல கேஸ் ஆயிட்டு. அதனால எல்லா நியமனத்தையும் நிறுத்திட்டாங்க. பிறகு, அவங்க பதவியில இருந்த 2019 வரைக்கும் பணம் வாங்கின யாருக்கும் நியமன ஆணை கொடுக்கல. அப்போ எலெக்ஷன் வந்துச்சு. நான் வெம்பக்கோட்டை ஒன்றியச்செயலாளராவும், சாத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தேன். வீ.சீ.பதவிய பயன்படுத்தி, முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மகனுக்கு ஆவினில் வேலை வாங்கிக்கொடுத்ததுக்கு பிரதிபலனா எங்க அண்ணன் ரவிச்சந்திரன் அ.தி.மு.க.மாவட்ட செயலாளராகவும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராவும் தலைமை அறிவிச்சுது. இதுக்கிடையில் தேர்தல் செலவுக்கு, ஊட்டிக்கு போய் ரூ.10 கோடியே 80 லட்சம் வாங்கிட்டு வந்து அதுல இருந்து 25 லட்சத்தை எனக்கு திருப்பி கொடுத்தாரு. இந்த தொகையில இருந்து 15 லட்சத்தை நான் விஜய்க்கு திருப்பிக் கொடுத்தேன். அதுக்கப்புறம், மீதி பணத்தை இப்ப வரைக்கும் தரல. பணம் கொடுத்தவங்க எல்லாரும் எனக்கு போன் பண்ணிக்கேட்காங்க.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments