Sunday, June 19, 2022
Homeஉலக செய்திகள்அன்னையர் தினத்தன்று உக்ரைன் தாய்மார்களை சந்திக்கும் ஜில் பைடன்; என்ன காரணம்?

அன்னையர் தினத்தன்று உக்ரைன் தாய்மார்களை சந்திக்கும் ஜில் பைடன்; என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், மே 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மே 8-ம் தேதி அன்னையர் தினத்தன்று ரஷ்யா – உக்ரைன் போரால் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்ட உக்ரேனிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளைச் சந்திக்கவிருக்கிறார். மேலும், அந்நாடுகளில் உள்ள அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்களையும் சந்திக்க உள்ளார்.

புலம்பெயர்ந்த உக்ரைன் நாட்டு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், உதவிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஜில் பைடன் சந்தித்துப் பேசவிருக்கிறார். ஏப்ரல் 27-ம் தேதி வரையிலும், உக்ரைனிலிருந்து போர் காரணமாக 30 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் போலந்துக்கும், சுமார் 8,17,300 பேர் ருமேனியாவுக்கும், 3,72,000 பேர் ஸ்லோவாக்கியாவுக்கும் தப்பிச் சென்றுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜில் பைடன்

இந்நிலையில், ஜில் பைடனின் வருகை உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆதரவைக் காட்டுவதாகவும், உக்ரைன் அகதிகளுக்கு அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளால் உதவி செய்யும் நிகழ்ச்சியாக அமையும் என்றும் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக, மார்ச் மாதத்தில் ஜில் பைடன் மற்றும் போலந்து அதிபரின் மனைவியான அகடா கோர்ன்ஹவுசர்-டுடா ஆகிய இருவரும் இணைந்து, ரஷ்யாவின் படையெடுப்பால் புலம் பெயர்ந்த அகதிகளுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காகப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments