Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்"அன்று வருத்தப்பட்ட அமிதாப் பச்சன்; இன்று ஏன் ட்வீட் பதிவிடவில்லை; !" - ஆதங்கப்படும் சத்ருகன்...

“அன்று வருத்தப்பட்ட அமிதாப் பச்சன்; இன்று ஏன் ட்வீட் பதிவிடவில்லை; !” – ஆதங்கப்படும் சத்ருகன் சின்ஹா| Actor Shatrughan Sinha has said that Bollywood friends are even afraid to call me after an election victory

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார். ஆனால் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதையடுத்து அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி நடிகர் சின்ஹாவிற்கு மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இதில் அசன்சோல் தொகுதியில் சின்ஹா அமோக வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பலரும் அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் பாலிவுட் நண்பர்கள் யாரும் தனக்கு போன் செய்யவில்லை என்று சின்ஹா வருத்தப்பட்டார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் வெற்றிக்கு பிறகு பாலிவுட் நண்பர்களிடமிருந்து ஒரு போன் அழைப்புக்கூட வரவில்லை. போன் செய்தால் அதனை டேப் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் யாரும் எனக்கு போன் செய்யவில்லை” என்றார்.

சத்ருகன் சின்ஹா

சத்ருகன் சின்ஹா

பாலிவுட்டில் படங்கள் எடுக்கவும், தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் பயப்படுகின்றனரா என்று கேட்டதற்கு, “நீங்கள் சொல்வது உண்மைதான். நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் பாலிவுட்டில் ஒரு சிலரை தவிர யாரும் எனக்கு போன் செய்யவே இல்லை. பாலிவுட்டில் பெரும்பாலானோர் இந்த அரசுடன் அல்லது அரசுத்தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகின்றனர். அவர்கள் பயப்படுகின்றனர்” என்று தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறிது உயர்த்தப்பட்டாலே கத்திக் கூச்சல் போடும் நடிகர் அமிதாப்பச்சன், இப்போது இந்த அளவுக்கு எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதும் அது குறித்து ஒரு வார்த்தை கூட தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடவில்லை. இது ஒன்றே பாலிவுட் பிரமுகர்கள் அரசைக் கண்டுபயப்படுகின்றனர் என்பதற்கு உதாரணம் என்று பாலிவுட் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். ” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments