Sunday, July 3, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்அமுல்போல இயற்கை விவசாயிகளுக்கு ஒரு கூட்டுறவு நிறுவனம் வேண்டும்! பாரம்பர்ய நெல் திருவிழா ஹைலைட்ஸ்!

அமுல்போல இயற்கை விவசாயிகளுக்கு ஒரு கூட்டுறவு நிறுவனம் வேண்டும்! பாரம்பர்ய நெல் திருவிழா ஹைலைட்ஸ்!

பாரம்பர்ய நெல் ரகங்களை பரவலாக்கும் நோக்கத்தோடும், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் தேசிய நெல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, மே 21, 22 ஆகிய தேதிகளில் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் பாரம்பர்ய நெல் திருவிழா நடைபெற்றது. இதில் முன்னோடி இயற்கை விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், திரைப்படத்துறையினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். உழவர்கள் பேரணியுடன் இவ்விழா துவங்கியது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இவ்விழாவில் 174 வகையான பாரம்பர்ய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டன. நம்மாழ்வார் விருது, நெல் ஜெயராமன் விருது, இளம் இயற்கை உழவர்கள் விருது, உழவர்களின் நண்பன் விருது வழங்கப்பட்டன. பாரம்பர்ய நெல் சாகுபடியில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில். 2 கிலோ விதைநெல் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பேசிய இயற்கை விவசாயி அசோகன், ‘’பாரம்பர்ய நெல் ரகங்களை மதிப்புக்கூட்டுவதற்கான சிறு சிறு இயந்திரங்களை மிகவும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். குஜராத்தில் உள்ள அமுல் பால் நிறுவனம் போன்ற ஒரு கூட்டுறவு நிறுவனத்தை, தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் உருவாக்க வேண்டும். மண்ணை பொன்னாக்கும் வித்தை நம் விவசாயிகளிடம் உள்ளது.

நெல் திருவிழாவில்

இது எப்படி முடியும் ? நம் விவசாயிகள் நெல்லை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்படி செய்யும் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். பல பயிர்களையும் சாகுபடி செய்ய வேண்டும். சாண எரிவாயு கலன் அமைப்பதன் மூலம் விவசாயிகள் பல வகைகளிலும் பலன் அடையலாம்’’ என்றார்.

திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ‘’நெல் திருவிழாவினால் திருத்துறைப்பூண்டி பெருமை அடைகிறது. பாரம்பர்ய விவசாயத்தை விரும்பக்கூடிய பலரும் இங்கு கூடுவது பெருமையாக உள்ளது‘’ என்றார். ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் ‘’நெல் என்பது நம் உணவு மட்டுமல்ல. தமிழர்களின் உணர்வோடும் கலந்தது. நெல் விடும் தூது நம் இலக்கியங்களில் உள்ளது. 45 விதமான நெல் ரகங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் ‘’இயற்கை விவசாயத்தையும், இயற்கை மருத்துவத்தையும் முறைப்படி ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும். நெல்லை கொள்முதல் செய்து சேமித்து வைப்பதற்கான குடோன்கள் போதுமானதாக இல்லை.

நெல் திருவிழாவில்

உதாரணத்திற்கு 100 மூட்டை கொள்முதல் செய்தால் 9 மூட்டை சேமித்து வைக்கதான் குடோன்கள் உள்ளன. இதனால் நெல் வீணாகிறது. டெல்டாவில் விளையும் ஒட்டுமொத்த நெல்லையும் முறையாக சேமித்து வைக்க, இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முழுமையான குடோன் வசதிகள் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

பாரம்பர்ய விதைகளை வழங்கி, விழாப்பெரூரை ஆற்றிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ’’தமிழ்நாட்டில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதற்கு 3400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பாரம்பர்ய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும். ஒவ்வொரு நோயை தீர்க்கக்கூடியது என அறிந்து ஆச்சர்யப்பட்டு போனேன். தமிழக சட்டமன்றத்தில் இயற்கை விவசாயத்திற்காக குரல் கொடுக்க ஒருவர் மட்டும்தான் உள்ளார். அவர். திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவானன்.

மாட்டுவண்டியி

இயற்கை விவசாயத்திற்கு தமிழக அரசு பல வகைகளிலும் உறுதுணையாக இருக்கும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிப்பு மட்டும் செய்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். உண்மையில் தற்போதைய தி.மு.க. அரசுதான் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கிறது. வேளாண்மைக்கு தீங்கு செய்யக்கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும் இங்கு அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

மேடையில்

மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் சசிகுமார், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவானன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் இயற்கை விவசாயி சித்தர், கோவையைச் சேர்ந்த 108 வயதான இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பாம்மாள், வேளாண் உதவி இயக்குநர் பூச்சி செல்வம் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏரளாமான விவசாயிகள் இவ்விழாவிற்கு வந்திருந்தார்கள். ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மைத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ மற்றும் இயற்கை விவசாயிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments