Wednesday, June 29, 2022
Homeஉலக செய்திகள்``அமெரிக்காவின் மனித உரிமைநிலை குறித்து இந்தியாவும் கவலை கொண்டிருக்கிறது!" - மத்திய அமைச்சர் பதிலடி |...

“அமெரிக்காவின் மனித உரிமைநிலை குறித்து இந்தியாவும் கவலை கொண்டிருக்கிறது!” – மத்திய அமைச்சர் பதிலடி | Have concerns about human rights in US: EAM Jaishankar

அமெரிக்க, இந்திய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் 2 + 2 சந்திப்பு ஏப்ரல் 11-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அரசியல் ராணுவ விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்க பாதுகாப்புவ் செயலாளர் லாயிட் ஆஸ்டின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஆண்டனி பிளங்கன் - ஜெய்சங்கர்

ஆண்டனி பிளங்கன் – ஜெய்சங்கர்
ட்விட்டர்

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவில் மனித உரிமைமீறல்கள் அதிகரித்துவருவதாகவும் அது தொடர்பாக சமீபத்தில் நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்துவருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்காவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் மற்றும் ராணுவ விவகாரங்களை மையப்படுத்தியே நடைபெற்றது. மக்கள் எங்களைப் பற்றி கருத்துகளைக் கூறவும், அதேசமயம், அவர்களின் கருத்துகள், நலன்கள், வாக்குவங்கிகள் ஆகியவற்றைப் பற்றி கவனிக்க எங்களுக்கும் சமமான உரிமை உள்ளது.

இந்தியா - அமெரிக்கா

இந்தியா – அமெரிக்கா

எனவே, எப்போது மனித உரிமைமீறல்கள் தொடர்பாக விவாதம் நடந்தாலும், அதை வெளிப்படையாகப் பேசத் தயங்க மாட்டோம். மேலும், மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களைக் கடந்த காலங்களில் விவாதித்திருக்கிறோம். அமைச்சர் பிளிங்கன் இந்தியா வந்த சமயங்களில் அதைப் பற்றி விவாதித்திருக்கிறோம். நாங்கள் இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

அமெரிக்காவின் மனித உரிமை உட்பட அனைத்து விவகாரங்கள் பற்றி எங்களாலும் கருத்து தெரிவிக்க முடியும். அமெரிக்காவில் மனித உரிமைப் பிரச்னை ஏற்படும்போது அது குறித்துப் பேசுவோம். முக்கியமாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பிரச்னை ஏற்பட்டால் அதைப் பற்றி நாங்கள் பேசுவோம். அமெரிக்காவின் மனித உரிமை நிலைமை குறித்து இந்தியாவும் கவலைகொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments