Thursday, June 30, 2022
Homeஉலக செய்திகள்அமெரிக்கா தலைமையில் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு... சீனாவுக்கு செக் வைக்கும் முயற்சியா?!

அமெரிக்கா தலைமையில் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு… சீனாவுக்கு செக் வைக்கும் முயற்சியா?!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த குவாட் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், அமெரிக்கா தலைமையில் ஜப்பானின் முன்னெடுப்பாக `இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு’ இந்த குவாட் மாநாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா செய்தியாளர் சந்திப்பின் போது, “இந்த மாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான ஆசிய-பசிபிக் வர்த்தக கூட்டமைப்பில் 13 நாடுகள் இணைந்து, இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டமைப்பானது 21-ம் நூற்றாண்டில் பொருளாதார போட்டியை உறுதி செய்வதற்கான சவால்களில், எங்கள் வர்த்தக கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாடாகும்” எனத் தெரிவித்தார்.

உலக நாடுகளின் தலைவர்கள் – டோக்கியோ

இந்த இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு வழக்கமாக உறுப்பு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை மற்றும் சந்தை அணுகல்களை எளிதாக்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்காது. அதைத்தாண்டி உறுப்பு நாடுகளுக்கிடையே டிஜிட்டல் பொருளாதாரம், விநியோகச் சங்கிலித் தொடர், எரிசக்தி உட்கட்டமைப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய நான்கு முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.

இந்த பொருளாதாரக் கட்டமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், அமெரிக்கா சீனாவை தவிர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments