Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்"அவங்க பிரபலமாவதற்காக பாப்பாவையும் சேர்த்து வீடியோ போடுறாங்க!" - `தாடி' பாலாஜி|Thadi balaji talks about...

“அவங்க பிரபலமாவதற்காக பாப்பாவையும் சேர்த்து வீடியோ போடுறாங்க!” – `தாடி’ பாலாஜி|Thadi balaji talks about his daughter poshika!

பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தார் தாடி பாலாஜி. அவர் பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் இருந்தபோது அவரது மனைவி நித்யாவும், மகள் போஷிகாவும் அவருடைய சமூகவலைதள பக்கங்களில் பாலாஜி குறித்து பேசியிருந்தனர். வீட்டிலிருந்து வெளி வந்ததும் பாலாஜி அதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், இன்று பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில்,

தாடி பாலாஜி

தாடி பாலாஜி

“என் பொண்ணோட பாதுகாப்புக்காக இங்கே வந்திருக்கேன். இவ்வளவு நாளா நானும் பொறுத்து, பொறுத்து பார்த்துட்டேன். எந்த பயனும் இல்லை. அவங்க பிரபலமாவதற்காக பாப்பாவையும் சேர்த்து ரீல்ஸ் பண்ண வைக்கிறாங்க. அதுல கம்மென்ட் எல்லாம் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்ப தான் பாப்பா 7ம் வகுப்பு போறாங்க. நீங்க பணம் கொடுக்கலைன்னா நானும், பாப்பாவும் தற்கொலை பண்ணிப்போம்னு மிரட்டுறாங்க. நித்யாவை நான் எதுவுமே சொல்லலை. அவங்க சந்தோஷமா வேற கல்யாணம் கூட பண்ணிக்கிட்டு வாழட்டும். என் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்னு தான் சொல்றேன். ஸ்கூலில் இருந்து கூப்பிட்டிருந்தாங்க… பாப்பா 6 எக்ஸாம் எழுத வேண்டிய இடத்தில் 3 தான் எழுதியிருக்காங்க. அந்த மூன்றிலும் நல்ல மதிப்பெண் தான் வாங்கியிருக்காங்க. ஏன் குழந்தை எக்ஸாம் எழுதலைன்னு கேட்டா ஈவண்ட் எதுக்கோ கூட்டிட்டு போயிருக்காங்க. லீவு போட்டுட்டு ஈவென்டுக்ணக கூட்டிட்டு போகிறதெல்லாம் நல்லாவா இருக்கு.

தாடி பாலாஜி

தாடி பாலாஜி

நித்யா கூட இருந்தா போஷிகாவிற்கு பாதுகாப்பு கிடையாது. அவளை நானே நல்லா படிக்க வைக்கிறேன். எப்ப என் பொண்ணுக்கு அப்பா நல்லவர் தான்னு தோணுதோ அப்போ அவ வரட்டும். அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன். எங்க ரெண்டு பேர் சண்டையில என் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கக்கூடாது. போஷிகா டிக்டாக் பண்றதால ஸ்கூலில் அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க.

போஷிகாவிற்கு தேவையான எல்லாத்தையும் நான் பண்றேன். பாப்பாவுக்கு எல்லாமே பண்ண ரெடி. பிக் பாஸ் போயிட்டு வந்ததும் கோடீஸ்வரன் ஆகிட்டேன்னு நினைக்கிறாங்க. ஆனா, உண்மையில் அப்படியில்லை. நித்யா பணம் கேட்குறாங்க. பாப்பாவை பார்த்துக்க முடியலைன்னா என்கிட்ட கொடுத்துடுங்க. நானே நல்ல ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கிறேன். தொடர்ந்து என்னை பற்றி தவறா சொல்லி, சொல்லி குழந்தை என்கிட்ட பேசவே பயப்படுறா. அந்த அளவுக்கு கிரியேட் பண்ணிட்டாங்க!’ என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments