Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்"அவர் வேற லெவல் கணவர்; அம்மாகிட்ட கோவிச்சுகிட்டு நான் புருஷன்கிட்ட வருவேன்" - பர்சனல் பகிரும்...

"அவர் வேற லெவல் கணவர்; அம்மாகிட்ட கோவிச்சுகிட்டு நான் புருஷன்கிட்ட வருவேன்" – பர்சனல் பகிரும் நிஷா

ஆங்கர், ஆக்டர் என பன்முகம் கொண்டவர் நிஷா கணேஷ். தனது எதார்த்தமான நடிப்பினால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தற்போது சீரியலில் அவரைப் பார்க்க முடியாவிட்டாலும் தொடர்து மீடியா துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு Hotstar-ல் வெளியாக இருக்கும் ‘MY3’ என்கிற வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு ரீவைண்ட் பேட்டி!

நிஷா கணேஷ்

என்னுடைய 16 வயதில் எதிர்பாராமல் அமைஞ்சது தான் இந்த மீடியா துறை. சும்மா பேப்பரில் பார்த்துட்டு ஒரு விளம்பரத்திற்காக ஆடிஷன் போனேன். எல்லாமே கடகடன்னு ஒரே வாரத்தில் முடிஞ்சிடுச்சு. ஆடிஷனில் செலக்ட் பண்ணி அந்த விளம்பர ஷூட்டிங்கும் உடனே ஆரம்பிச்சிட்டாங்க. அந்த அனுபவம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால பிளஸ் டூ முடிச்சிட்டு விஸ்காம் செலக்ட் பண்ணினேன். படிச்சிட்டே ஜாலியா வேலை பார்க்க ஆரம்பிச்சேன். சின்ன வயசிலேயே ஸ்டேஜ் ஈவென்ட் எப்பவும் பண்ணிட்டு இருப்பேன். அதனால எங்க வீட்டிலும் மீடியா ஃபீல்டுக்கு ஓகே சொல்லிட்டாங்க.

அப்புறம் ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு எப்பவுமே புதுசா ஒரு விஷயத்தை கத்துக்கப் பிடிக்கும். அதனால ஆங்கரிங்கிலும் பல நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அப்ப தான் `கனா காணும் காலங்கள்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல் முழுக்கவும் காலேஜ் முடிச்சிட்டு மறுபடி காலேஜ் போன ஃபீல். ரொம்ப கஷ்டப்பட்டெல்லாம் அந்த சீரியலில் எதுவும் பண்ணல. எதார்த்தமா எப்படி நாம ஃப்ரெண்ட்ஸோட காலேஜ் வாழ்க்கையை ரசிப்போமோ அப்படித்தான் ரசிச்சோம். ஒரே ஜமுக்காலத்துல தான் எல்லாரும் படுத்து ரெஸ்ட் எடுப்போம். ஆண், பெண் பேதமும் கிடையாது.. நீ சின்னவன், நான் பெரியவன் என்கிற பேதமும் கிடையாது. அந்த ஃப்ரெண்ட்ஷிப் பாண்டிங் இன்னைக்கு வரைக்குமே இருக்கு. எங்க பேட்ஜ்ல நடிச்சவங்களில் பெரும்பாலும் ஃபீல்டுஅவுட் ஆகலை. இப்பவரைக்கும் மீடியாவில் தான் டிராவல் பண்ணிட்டு இருக்காங்க. சமீபத்தில் நடந்த ‘கனா காணும் காலங்கள் ரீயூனியனுக்கு’ ரொம்ப ஆசையா டீம் எல்லோருடனும் கலந்துகிட்டேன்.

நிஷா கணேஷ்

‘மகாபாரதம்’ தொடரில் திரெளபதியாக நடிச்சேன். ஆங்கரிங் பண்ணும்போது என் தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்குன்னே அந்தக் கேரக்டருக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. நான் ஸ்போர்ட் பர்சன். அதனால அந்தக் கேரக்டருக்கு செட்டாக கொஞ்சம் டைம் எடுத்துச்சு. துரத்தும் சீன் எல்லாம் எடுக்கும்போது வில்லன்களாக நடிக்கிறவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. அத்லெடிக் பிளேயர் என்பதால் ஓடுங்கன்னு சொன்னதும் கடகடன்னு ஓடிடுவேன். அந்த சீரியல் ஷூட்டிங் பெங்களூரில் நடந்துச்சு. நிறைய கன்னட ஆர்ட்டிஸ்ட்களுடன் நடிச்சேன்.

பிறகு, ‘தலையணைப்பூக்கள்’ தொடரில் கதாநாயகியாக நடிக்கும்போது பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். உண்மையாகவே எனக்கு ஜோடியாக நடிச்ச ஶ்ரீக்கு என் நன்றியை சொல்லியே ஆகணும். அவர் வேற லெவல் ஆர்ட்டிஸ்ட். ஒவ்வொரு சீனுக்கும் எக்ஸ்ட்ரா உழைப்பு போடுவாரு. அந்தத் தொடரில் அவர் ஆட்டோ டிரைவர். அவரா சென்னை லாங்குவேஜ் பேசுறேன்னு இன்புட் கொடுத்தாரு. அது பயங்கரமா ஒர்க்அவுட்டும் ஆச்சு. அப்பதான் கொடுக்கிற டயலாக்கை மட்டும் அப்படியே பண்ணாம எக்ஸ்ட்ராவா நாமளும் ஏதாவது கிரியேட்டிவா பண்ணனும் என்பது புரிஞ்சது.

நிஷா கணேஷ்

எனக்கும், கணேஷிற்கும் திருமணம் ஆன பிறகும்கூட நான் பிரேக் எடுக்கல. டிஜிட்டல் மீடியாவில் ஆக்டிவாக ஏதோ ஒன்று பண்ணிட்டே தான் இருந்தேன். கர்ப்பமா இருக்கும்போது ஜெயா டிவியில் ‘ஜெயா ஸ்டார் சிங்கர்ஸ்’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு சைந்தவி, தரண் இருவரும் தான் நடுவர்களாக இருந்தாங்க. நானும், சைந்தவியும் பயங்கர க்ளோஸ். சைந்தவியுடைய அம்மா எனக்காக சமைச்சு எல்லாம் கொண்டு வருவாங்க. என்னை ரொம்ப கேர் எடுத்து பார்த்துப்பாங்க. ஃபைனல் சமயம் எனக்கு ஏழு மாசம். ஆனாலும், செட்ல எல்லாரும் சப்போர்ட் பண்ணி என்னை ஆங்கரிங் பண்ண வச்சாங்க.

அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் சைந்தவிகூட நல்ல நட்பு இருக்கு. எந்த விஷயம்னாலும் சரி அது ஹேப்பியோ, துக்கமோ மனசுவிட்டு சைந்தவிகிட்ட பேசுவேன். அதே மாதிரி, வாணி போஜன் கூடவும் இப்ப வரைக்கும் டச்ல இருக்கேன். ஆரம்பத்தில் எங்க ஃப்ரெண்ட்ஷிப் எப்படி இருந்துச்சோ இப்ப வரைக்கும் அப்படியே இருக்கு என்றவரிடம் வெப் சீரிஸ் குறித்துக் கேட்டோம்.

நிஷா கணேஷ்

“சன் டிவியில் ஒரு தொடரில் நடிக்க சம்மதம் எல்லாம் சொல்லிட்டேன். கடைசி நேரத்துல குழந்தைகூட இன்னும் கொஞ்சம் நேரம் செலவழிக்கணும்னு தோணுச்சு. படங்கள், வெப் சீரிஸ் பொறுத்தவரை சீக்கிரம் ஷூட் முடிஞ்சு வீட்டுக்கு வந்திடலாம். சீரியல்னா காலையில் இருந்து நைட் வரைக்கும் ஆகிடும். பாப்பா இருந்துப்பாங்கலான்னும் தெரியாது. அதனால தான் அதுக்குள்ள போகணுமா இன்னும் ஒரு வருஷம் டைம் எடுத்துக்கலாமேன்னு தோணுச்சு. எது பண்ணாலும் அதில் நம்மளுடைய உழைப்பை 100% கொடுக்கணும்.. அதனால அந்த சீரியலில் நடிக்க முடியல. ஏற்கனவே நான் ஒர்க் பண்ணின டைரக்டர் மூலமா இயக்குநர் ராஜேஷ் எனக்கு அறிமுகமானார். சிவா மனசுல சக்தி, பாஸ் @ பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கியவர். அவருடைய MY3 வெப் சீரிஸில் தான் இப்ப நடிச்சிட்டு இருக்கேன். ரொம்ப ஜாலியான ஒரு டைரக்டர். படங்கள், வெப் சீரிஸ்னு இப்ப போயிட்டு இருக்கு என்றவரிடம் ஃபேமிலி குறித்துப் பேசினோம்.

எங்க பொண்ணு சமைரா அப்படியே கணேஷ் மாதிரி. அவங்க கண்ணு மட்டும் தான் என்னை மாதிரி இருக்கும். மற்றபடி அவங்க மினி கணேஷ். பேசுறது, நடக்குறதுன்னு எல்லாமே அவர் சாயல்! கணேஷ் வீட்ல இல்லைன்னாலும் அவருடைய யோகா மேட்ல ஏறி உட்கார்ந்துட்டு யோகா பண்ணப் போறேன்னு சொல்லுவாங்க. ஸ்போர்ட்ஸ்ல நிறைய ஆர்வம் இருக்கு. அதே மாதிரி, பயங்கர வாலும் கூட! பொதுவாகவே நாங்க நிறைய டிராவல் பண்ணுவோம். சமீபத்தில் பாம்பே, கொடைக்கானல் போயிருந்தோம். பாப்பா என்ஜாய் பண்ற மாதிரியான இடங்களைத் தேர்ந்தெடுத்து பயணிக்க ஆரம்பிச்சிருக்கோம். ஒரு ரிலேஷன்ஷிப் பொறுத்தவரைக்கும் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ ரொம்பவே முக்கியம். நம்ம ஃப்ரெண்ட் தப்பு பண்ணாலும் மன்னிச்சிடுவோம்.. அதே மாதிரி ஃப்ரெண்ட்ஸூக்கு இடையில் எந்த ஈகோவும் பார்க்க மாட்டோம். அப்படித்தான் கணவன் – மனைவி உறவும் இருக்கணும். ‘நான் எங்கேனாலும் போவேன்.. நீ எங்கேயும் போகக்கூடாது!’ என்கிற எண்ணத்துடன் இருக்காமல் ஒருத்தரையொருத்தர் சமமா ட்ரீட் பண்ணனும். எல்லார் வீட்டிலும் புருஷன்கூட சண்டை போட்டுட்டு அம்மா வீட்டுக்கு போவாங்க.. நான் என் அம்மா கூட சண்டை போட்டுட்டு புருஷன் வீட்டுக்கு வருவேன்.. அந்த அளவுக்கு கணேஷ் வேற லெவல் கணவர். அவர்கிட்ட ஒளிவுமறைவு இல்லாம எதுனாலும் ஓப்பனா பேசலாம்.

நிஷா கணேஷ்

பிக்பாஸில் அவர் இருந்தப்ப எல்லாமே எனக்கு புதுசா இருந்துச்சு. நான் எந்த முடிவு எடுத்தாலும் அவர்கிட்ட கேட்டுட்டு தான் எடுப்பேன். அந்த டைம் அவர் என் பக்கத்தில் இல்லாதது கஷ்டமா இருந்துச்சு. உள்ளே இருந்தப்பவும் சரி, வெளியில் வந்த பிறகும் சரி அவர் அடுத்தவங்களை பற்றி யோசிக்கவே இல்ல. யார் என்ன சொன்னா என்ன? அந்த 100 நாள் நான் என்ன கத்துக்கிட்டேன் அதுதான் எனக்கு முக்கியம்னு சொல்லுவார். அவர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் நாங்க ஜாலியா பிரான்ஸ் சுற்றிப் பார்க்க கிளம்பிட்டோம்!” என புன்னகைக்கிறார் நிஷா. அந்த அழகிய குடும்பத்திற்கு பூங்கொத்து வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments