ஆசிய ஹேண்ட்பால்: இந்தியா ‘வெள்ளி’

பாங்காக்: ஆசிய யூத் பீச் ஹேண்ட்பால் தொடரில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், பெண்களுக்கான ஆசிய யூத் பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 2வது சீசன் நடந்தது. இதில் தாய்லாந்து, இந்தியா, ஹாங்காங் என, மூன்று அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை (‘டபுள் ரவுண்டு ராபின்’) மோதின.

 

இந்திய அணி, தனது முதலிரண்டு போட்டியில் தாய்லாந்து (2–0, 16–15, 13–12), ஹாங்காங் (2–0, 15–9, 14–12) அணிகளை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் 0–2 (7–12, 13–17) என தாய்லாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, பின் எழுச்சி கண்டு 2–0 (11–7, 11–10) என ஹாங்காங் அணியை மீண்டும் தோற்கடித்தது.

 

முடிவில், 3 வெற்றி, ஒரு தோல்வி என, தலா 6 புள்ளிகளுடன் தாய்லாந்து, இந்தியா அணிகள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தன. பின், கோல் வித்தியாச அடிப்படையில் இந்தியாவை (+6) முந்திய தாய்லாந்து (+32) அணி முதன்முறையாக தங்கம் வென்றது. கடந்த சீசனில் (2016) வெள்ளி வென்றிருந்தது.

முதன்முறையாக இத்தொடரில் பங்கேற்ற இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நான்கு போட்டியிலும் தோல்வியை தழுவிய ஹாங்காங் அணி வெண்கலம் வென்றது.

 

தவிர, இம்மூன்று அணிகளும் வரும் ஜூன் 14–19ல் கிரீசில் நடக்கவுள்ள பெண்களுக்கான உலக யூத் பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றன.

Advertisementவருக

Leave a Comment

Your email address will not be published.