Friday, July 1, 2022
Homeஅரசியல் செய்திகள்ஆட்சியை மாற்ற விவசாயிகளால் முடியும்: தெலுங்கானா முதல்வர்| Dinamalar

ஆட்சியை மாற்ற விவசாயிகளால் முடியும்: தெலுங்கானா முதல்வர்| Dinamalar

சண்டிகர்: ”மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை மாற்ற விவசாயிகளால் முடியும்,” என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ் கூறினார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தலைநகர் சண்டிகருக்கு, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று சென்றார்.

முதல்வர் பகவந்த் சிங் மானை சந்தித்து பேசினார்.பின்னர் நிருபர்களிடம் சந்திரசேகர ராவ் கூறியதாவது: நாட்டில் விவசாயிகள் நினைத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் தான், சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

நாட்டின் சுதந்திர போராட்டத்திலும், பசுமை புரட்சியிலும் பஞ்சாப் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments