Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்`ஆட்டோமொபைல், ஐ.டி துறைகளுக்கு முக்கியத்துவம்!' - வெற்றி பெறுமா புதுச்சேரி தொழில்முனைவோர் மாநாடு? | puducherry...

`ஆட்டோமொபைல், ஐ.டி துறைகளுக்கு முக்கியத்துவம்!’ – வெற்றி பெறுமா புதுச்சேரி தொழில்முனைவோர் மாநாடு? | puducherry govt to organize entrepreneur conference to establish industries

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் பங்கேற்க இருக்கின்றனர். மாநாடு குறித்து பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில் துறையை மேம்படுத்தவும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்திற்காக சேதராப்பட்டு மற்றும் கரசூர் பகுதிகளில் 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலம் தற்போது அரசிடம் இருக்கிறது. அங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரியில் தொழில் முனைவோர்கள் மாநாட்டை நடத்தவிருக்கிறோம். அதில் ஐ.டி, பார்மசூட்டிகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருக்கிறோம். குறிப்பாக, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கவிருக்கிறோம். அதே சமயம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே வாய்ப்பையும், வரவேற்பையும் கொடுப்போம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments