கிழக்கு சீமையிலே, எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி உட்பட பல படங்களின் மூலம் நமது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் நெப்போலியன். நடிகராக மட்டுமே நமக்கு அறிமுகமான நெப்போலியன், தற்போது விவசாயத்திலும் அசத்தி வருகிறார்.
நெப்போலியன் விவசாயம் செய்கிறார் என்றதும் தமிழகத்தில் என நினைப்பீர்கள்.. ஆனால் இவர் விவசாயம் செய்து வருவது அமெரிக்காவில் என்பதுதான் நம்மை வியப்படைய வைக்கிறது. இவர் விவசாயம் செய்துவருவது மட்டுமன்றி, பண்ணை வைத்து அதில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த பண்ணைக்கு ‘நெப்போலியன் பண்ணை’ என தனது பெயரை வைத்துள்ளார்.
விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்து விட்டால் இடம் ஒரு தடையல்ல என்பதை நெப்போலியன் செய்து காட்டி உள்ளார். மேலும் “கடவுள் எனும் விவசாயி… கண்டெடுத்த தொழிலாளி விவசாயி… விவசாயி.. “ என்ற பாடலை பாடி தன்னுடைய பண்ணையை சுற்றிக் காட்டி, அமெரிக்க விவசாயி என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தனது கோழிகளுக்கு உணவளித்துக் கொண்டும், விவசாயத்தை பார்த்துக் கொண்டும் தன்னுடைய வாழ்க்கையை இன்புற வாழ்ந்து வருகிறார் நெப்போலியன். இவரின் முயற்சிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.