Wednesday, July 6, 2022
Homeஅரசியல் செய்திகள்ஆதித்யா மேலாண்மை அறிவியல் கல்லுாரி | Dinamalar

ஆதித்யா மேலாண்மை அறிவியல் கல்லுாரி | Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரியில், ஆதித்யா கல்விக் குழுமம் சார்பில், ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆதித்யா கல்விக் குழுமத்தின் ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துவக்க விழா மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான ‘கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை’ என்ற உயர் கல்வி ஆலோசனை கருத்தரங்கம், ஜிப்மர் கலையரங்கில் நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி வைத்தார். உயர் கல்வி கருத்தரங்கையும் துவக்கி வைத்தார்.முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘புதுச்சேரியில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிகளவில் உருவாக வேண்டும். கலைக்கல்லுாரி படிப்பில் தேர்ச்சி பெற்று நடுத்தரத்தில் உள்ளோர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., துறையில் வர முடியும். புதுச்சேரி மாணவர்கள் சாதிக்க வேண்டும்’ என்றார்.தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வுகளில் கோயம்புத்துாரை சேர்ந்த ஊடக முதன்மை வல்லுநர் சீனிவாசன், விஷூவல் கம்யூனிகேஷன் துறை குறித்தும், சென்னை கிரே மேட்டர் அகாடமிக்ஸ் இயக்குனர் அசோக்குமார் ராஜாராம் சி.ஏ., சி.எஸ்., சி.எம்.ஏ., மற்றும் ஏ.சி.சி.ஏ., படிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.டில்லி கியூவிங்ஸ் திறன் மேம்பாட்டு கல்வி நிறுவனர் அங்கித் ஜெய்சுவால், மென்பொருள் திறன் குறித்தும், தமிழ்நாடு காவல் துறை முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி, தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், நிறுவனர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்யா நாராயணா கல்வி அறக்கட்டளை டிரஸ்ட்டி அனுதா பூனமல்லி, ஆர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், ‘சி.ஏ., படிப்பது கடினமானது என கருதுகின்றனர். இதில், நடுத்தர மாணவர்களும் தேர்ச்சி அடைய முடியும். ஆதித்யா குழுமம் சார்பில் மருத்துவக் கல்லுாரி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளோம்’ என்றார்.புதுச்சேரி கூடப்பாக்கம் கோனேரிகுப்பத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2022-23ம் கல்வியாண்டிற்கு பி.காம்., ஜெனரல், பி.காம்., கார்ப்பரேட் செகரட்ரிஷிப், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், இயற்பியல், வேதியியல், பி.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.இப்படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையும் நடைபெற உள்ளது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments