Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்``ஆதீனத்தை தோளில் சுமக்க நான் நேரில் வருவேன்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை |...

“ஆதீனத்தை தோளில் சுமக்க நான் நேரில் வருவேன்” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | TN BJP leader Annamalai post a tweet on Dharmapuram Adheenam issue

மனிதனை மனிதனே சுமக்கக்கூடாது என திராவிடர் கழகத்தினர் குரலெழுப்பியதையடுத்து, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில், பல்லக்கு தூக்குவதற்கு அப்பகுதி கோட்டாட்சியர் தடை விதித்திருந்தார். அதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “மே 22-ம் தேதியில் தான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதற்குள், ஆதீனங்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தற்போது ட்வீட் செய்துள்ளார்.

அண்ணாமலை - ஸ்டாலின்

அண்ணாமலை – ஸ்டாலின்

அடுத்தடுத்து வெளியான இந்த ட்விட்டர் பதிவில், “தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை, தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம்.

கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதைப் போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையில் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பா.ஜ.க இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டத் தயாராக இருக்கிறது” என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments