Wednesday, July 6, 2022
Homeஅரசியல் செய்திகள்ஆந்திராவில் அமைதியாக கரை கடந்தது அசானி புயல்| Dinamalar

ஆந்திராவில் அமைதியாக கரை கடந்தது அசானி புயல்| Dinamalar

சென்னை: வங்கக் கடலில் உருவான ‘அசானி’ புயல், ஆந்திராவின் மசூலிப்பட்டினம், நரசப்பூர் இடையே அமைதியாக கரையை கடந்தது. வானிலை மைய கணிப்புப் படி, ஒடிசாவுக்கு செல்லவில்லை.

வங்கக் கடலில் அந்தமானுக்கு வட மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, அசானி தீவிர புயலாக மாறியது. இந்த புயல், நேரடியாக ஒடிசாவை நோக்கி செல்வதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், அசானி புயல், ஆந்திராவில் கரை கடக்கும் என, வெளிநாட்டு வானிலை ஆராய்ச்சி அமைப்புகள் தெரிவித்தன.

இந்நிலையில், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், தெற்கு மற்றும் மத்திய கடலோர ஆந்திர பகுதிகள் வழியே, அசானி புயல் கரையை நெருங்கியது. ஒடிசாவுக்கு புயல் செல்லும் என நேற்று வரை, சென்னை வானிலை மையம் தொடர்ந்து கூறிவந்த நிலையில், புயல் ஆந்திராவை விட்டு நகரவில்லை.ஆந்திர மாநிலத்தில், மசூலிப்பட்டினத்துக்கும், நரசப்பூருக்கும் இடையே, நேற்று மாலை அமைதியாக கரையை கடந்தது.

தீவிர புயலில் இருந்து, புயலாகவும், பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மீண்டும் வங்கக் கடலுக்குள் நுழைந்து வலுவிழக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புயல் கரை கடக்கும் வரை, சென்னை முதல் விசாகப்பட்டினம் வரை, கடலோர மாவட்டங்களில், அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆந்திர பகுதிகளில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

latest tamil news

கன்னியாகுமரி துவங்கி புவனேஷ்வர் வரையில் கடலோர பகுதிகளில், கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, பள்ளிப்பட்டு, தேக்கடி, திருப்பூரில், 5 செ.மீ., மழை பெய்திருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று வடக்கு கடலோர மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் கப்பல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால், ஒடிசாவில் இருந்து நிலக்கரி ஏற்றி வரும் கப்பல்கள், தமிழகத்திற்கு வர வழக்கத்தை விட ஒன்று, இரண்டு நாள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments