Friday, July 1, 2022
Homeஅரசியல் செய்திகள்ஆந்திரா: அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரம்; அமைச்சர், எம்.எல்.ஏ இல்லங்களுக்கு தீ வைப்பு |...

ஆந்திரா: அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரம்; அமைச்சர், எம்.எல்.ஏ இல்லங்களுக்கு தீ வைப்பு | Andhra Minister’s House Set Ablaze As Violence Rocks Amalapuram Town Over Renaming District

ஆந்திர மாநிலத்தில் `கோனசீமா’ என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்குப் பெயரிடுவதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அங்கு மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள 13 மாவட்டங்கள், தற்போது 26 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்துக்கு `பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா’ எனப் பெயரிடலாம் என அரசு பரிசீலித்து வந்தது. இதற்கு சில அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வந்தன. இந்த நிலையில், அந்த அதிருப்தி அலை தற்போது கலவரத்துக்கு வித்திட்டிருக்கிறது.

அம்பேத்கர் பெயரை அந்த மாவட்டத்துக்குச் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், அந்தப் பகுதி மக்களும் போராட்டத்தில் இறங்கினர். ஆரம்பத்தில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசு சொத்துகளைக் கல்லெறிந்தும், தீயிட்டுக் கொளுத்தியும் சேதப்படுத்தினர். ஒருகட்டத்தில் ஆத்திர மிகுதியில் போராட்டக்காரர்கள் ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.விஸ்வநாத் வீட்டுக்கு தீ வைத்தனர். அவர் வீட்டின் முன்பிருந்த மூன்று கார்களும் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால், அமைச்சர் அவர் குடும்பத்தினருடன் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டார். அதேபோல, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சதீஷ் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments