ஆபாச படப்பிடிப்பில் லத்தியால் அடித்ததா போலீஸ்; பயந்த உர்ஃபி ஜாவெத்; வைரல் வீடியோவின் பின்னணி இதுதான்| Did Big Boss model beauty Urfi Javed get caught by the police during the porn shoot?

மாடல் அழகியும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான உர்ஃபி ஜாவேத் பேஷன் ஆடைகளை அணிவதில் பிரபலம் ஆகும். இவரது ஆடைகள் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர்போனது. உர்ஃபி ஜாவேத் தற்போது ஆபாச படத்தின் படப்பிடிப்பின்போது போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார் என்பதாகக்கூறி வீடியோவை ரோஹித் குப்தா என்பவர் வெளியிட்டுள்ளார். அதில் உர்ஃபி ஆபிஸ் ஒன்றில் இயக்குநர் ஒருவரைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது உர்ஃபியிடம் இது ஒரு ரகசிய புராஜெக்ட் என்று கூறி படம் குறித்த விபரங்களை உர்ஃபியிடம் தெரிவிக்கிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் வில்லன் என்று தெரிவிக்கிறார். உடனே ஆச்சரியம் அடைந்த உர்ஃபி மேற்கொண்டு கூறும்படி கேட்கிறார். இப்படத்தில் ஹீரோவாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் நடிப்பதாகவும், பாட்ஷா இசையமைப்பதாகவும் தெரிவித்தார். அந்நேரம் இயக்குநர் என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்தார். அவர் வேறு ஒருவரை அழைத்து வந்தார். அவர்தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிவித்தனர்.

போலீஸாருடன் உர்ஃபி

போலீஸாருடன் உர்ஃபி

அதோடு அவர் உகாண்டாவில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து படப்பிடிப்பு ஒத்திகைக்கு வரும்படி உர்ஃபியை அழைத்துச் சென்றனர். நடிகருடன் உள்ளே சென்றனர். அங்கு எப்படி நடிக்கவேண்டும் என்பது குறித்து இயக்குநர் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு போலீஸ் அதிகாரி ஒருவர் வந்தார். அவர் உர்ஃபி உட்பட மூன்று பேரிடமும் ஆபாச படப்பிடிப்பு நடைபெறுகிறா என்று கேட்டார். அதோடு உர்ஃபியை தவிர அங்கு இருந்த 3 பேரையும் போலீஸ் என்று சொல்லிக்கொண்டு வந்த நபர் லத்தியால் அடிக்க ஆரம்பித்தார். உடனே அவர்கள் இவை எல்லாவற்றிற்கும் உர்ஃபிதான் காரணம் நாங்கள் ஏழைகள் எங்களை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உர்ஃபி ஜாவேத் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் தனது மேலாளருக்கு போன் செய்து எந்த மாதிரியான இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறாய் என்று கூறி வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் இவை உண்மையானது கிடையாது என்றும் பிராங்க் என்றும் உர்ஃபியிடம் அவரது மேலாளர் தெரிவித்தார். அதன் பிறகே உர்ஃபி சமாதானம் அடைந்தார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.