இந்த நிலையில், தாலிபன்களின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா பெண்கள் பர்தா அணிவது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக தாலிபன் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வீட்டிலிருந்து பொது இடங்களுக்கு வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும். அது பாரம்பர்யமானது மற்றும் மரியாதைக்குரியது. இளைஞர்களை சந்திக்கும்போது ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். பெண்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்காமல் இருந்தால், அவர்களுடைய நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அரசு வேலையிலிருந்து நீக்கப்படலாம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கன்: `தலை முதல் கால் வரை பர்தா..!’ – பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது தாலிபன் அரசு! | Taliban chief orders all Afghan women to wear the burqa in public place
RELATED ARTICLES