Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்ஆப்கானிஸ்தான்: மனித உரிமைகள் ஆணையத்தை கலைத்த தாலிபன்கள் - காரணம் இதுதான்! | Taliban Dissolves...

ஆப்கானிஸ்தான்: மனித உரிமைகள் ஆணையத்தை கலைத்த தாலிபன்கள் – காரணம் இதுதான்! | Taliban Dissolves Afghanistan’s Human Rights Commission

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்தே அங்கு பொருளாதார நெருக்கடி சூழல் நீடித்துவருகிறது. இந்த நிலையில், தாலிபன் அரசு தங்கள் முதல் வருட தேசிய பட்ஜெட்டை அறிவித்தனர். அதில், இந்த நிதியாண்டில் மட்டும் 44 பில்லியன் ($501 மில்லியன்) நிதிப் பற்றாக்குறை சூழலை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்வதாக தகவல் தெரிவித்திருக்கிறது.

தாலிபன்கள்

தாலிபன்கள்

இந்த நிலையில், தேசிய நல்லிணக்கத்திற்கான உயர்கவுன்சில் (HCNR), தேசியப் பாதுகாப்பு கவுன்சில், மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றை கலைத்து தாலிபன் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மனித உரிமைகள் ஆணையம்

மனித உரிமைகள் ஆணையம்

இது குறித்து தாலிபன் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் இன்னாமுல்லா சமங்கானி, “இந்தத் துறைகள் அவசியமானதாகக் கருதப்படாததாலும், வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படாததாலும் கலைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தேசிய வரவுசெலவுத் திட்டம் வெளிப்படைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அதனால், உற்பத்தித் திறன் கொண்ட துறைகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மீண்டும் இவை கொண்டுவரப்படும்” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments