அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தொடக்கப்பள்ளியொன்றில் 18 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டது. மேலும் இது குறித்து அமெரிக்க அதிபர் பைடன், “இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் உலகில் வேறு எங்கும் அரிதாகவே நடக்கும். உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பாக, இந்தியா தனது சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.