Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்ஆர்.எஸ்.எஸ்., அவதூறு வழக்கு: காங்., - எம்.பி., ராகுல் மனு

ஆர்.எஸ்.எஸ்., அவதூறு வழக்கு: காங்., – எம்.பி., ராகுல் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் அவதுாறு வழக்கு விசாரணையில், நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி., ராகுல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி என்ற இடத்தில், 2014ல் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகையில், ‘மகாத்மா காந்தி படுகொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., உள்ளது’ என்றார்.இதையடுத்து, ராஜேஷ் குன்டே என்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர், தானே மாவட்ட நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

latest tamil news

இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்குமாறு ராகுல் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.,யாக இருப்பதால், அடிக்கடி தொகுதி பணிகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் தொடர் பயணங்கள் செய்ய வேண்டி உள்ளது.

எனவே, நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கும் அளிக்க வேண்டும்’ என, அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. ராகுல் மனு மீது பதில் அளிக்குமாறு ராஜேஷ் குன்டேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments