ஆளுநர், மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்த விவாதத்தை கிளப்பியிருக்கிறதா பேரறிவாளன் வழக்கு! | Perarivalan petition; Has the governor created a debate over the powers of state and union governments?

அதன் காரணமாகத்தான் நீதிபதிகள், ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்கிற கருத்துகளை ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றனர். அதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையான சாரம்சம் எப்படி இருக்க வேண்டும் என்பது வரையான விவாதங்கள் தற்போது எழுந்திருக்கின்றன. எனவே, இந்த விவகாரம் பேரறிவாளன் விடுதலை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேருக்குமான விடுதலை எப்படிச் சாத்தியமாகும் என்பதைத் தாண்டி, மத்திய, மாநில அரசுகளுக்கான அதிகாரம், ஆளுநருக்கான அதிகாரம் குறித்த விவாதங்கள் என அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது” என்கிறார்.

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் இந்த விவகாரங்கள் குறித்துப் பேசினோம்.

“சி.பி.ஐ உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் விசாரித்து தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம், மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தெளிவாகத் தீர்ப்பளித்துவிட்டது. இந்த நிலையில், 161 பிரிவின் கீழ் இந்த விஷயத்தில் மாநில அரசு முடிவெடுக்கிறது என்றால் அந்த மனுவை மத்திய அரசுக்குத்தான் ஆளுநர் அனுப்ப முடியும். நீதிமன்றத்தில் தற்போது நடந்துகொண்டிருப்பது வாதப் பிரதிவாதங்கள்தானே தவிர, தீர்ப்பல்ல. `நம் நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொலை செய்தவர்களை விடுவிடுத்தால், பின்னால் மிகப்பெரிய பின்விளைவுகள் உண்டாகும். அதனால், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது’ என மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்துவிட்டது. நீதிமன்றம் விடுவித்தால், எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்பதுதான் தமிழக பா.ஜ.க-வின் நிலைப்பாடு. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில், `வழக்கு முடிந்துவிட்டது, இனிமேல் எங்களால் தலையிட முடியாது’ என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டது. தற்போது பேரறிவாளன் தொடுத்த தனி வழக்கில்தான் வாதப் பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன. மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனக் கருத்து தெரிவித்துவிட்டார். அதனால், முழுமையான தீர்ப்பு வரட்டும்” என்கிறார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.