கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியலில் நவீன் மற்றும் ஹீமா பிந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.Jeev Zala Yeda Pisa என்ற மராத்தி சீரியலில் ரீமேக்காக உருவாகி ஒளிப்பரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதில் நவீன் மற்றும் பிந்துவின் காதல் ரொமென்ஸ் காட்சிகள் எப்போதும் ரசிகர்களின் பேவரட். தற்போது இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இந்த படப்பிடிப்பு முடிவுற்றதை கொண்டாடும் விதமாக சீரியல் குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சீசன் இன்னும் சில நாட்கள் மட்டும் ஒளிப்பரப்பாகும் நிலையில் விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கவுள்ளதாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதற்கிடையே சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பிந்து, இந்த சீசனோடு விலகவுள்ளதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?