Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்இது `பிரசாந்த் கிஷோர்’ பாலிட்டிக்ஸ்

இது `பிரசாந்த் கிஷோர்’ பாலிட்டிக்ஸ்

2022, ஜனவரி: “ஐந்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றாலும்கூட, 2024 லோக் சபா தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க முடியும்”

2022, ஜனவரி: “சித்தாந்த ரீதியாகக் காங்கிரஸை பலவீனமடைய அனுமதித்தால், அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல”

5 மாநில தேர்தல் முடிவுகள், மார்ச் 10: “பஞ்சாபைத் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வி”

2022 மார்ச் 11: “இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கிறதே தவிர, மாநிலத் தேர்தலில் இல்லை. பிரதமர் மோடிக்கும் இது நன்றாகத் தெரியும்”

2022 மார்ச்: “இந்தியாவின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள 200 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக-வால் 50 இடங்களில் கூட வெற்றிபெற முடியவில்லை. 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது”

2022 மார்ச்: ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் திடீர் சந்திப்பு

2022 ஏப்ரல்: சோனியாகாந்தியுடன் ஆலோசனை. காங்கிரஸ் குழுவிடம் 2024 தேர்தல் வியூக அறிக்கை தாக்கல்

2022 ஏப்ரல்: தெலுங்கானா ஆளுங்கட்சியும், காங்கிரஸின் எதிர்க்கட்சியான TRS- கட்சியுடன் IPAC தேர்தலுக்காக ஒப்பந்தம்

2022, ஏப்ரல்: காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையிலிருந்து விலகல். “நான் அந்தக் கட்சியில் இணைவதை விடவும், இப்போதைக்குக் கட்சித் தலைமையே முக்கியம்”

2022, மே 2: “பிரச்னைகளை நன்றாகப் புரிந்துகொள்ள உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது”

2022 மே 5: “இப்போதைக்குக் கட்சி தொடங்குவதாக இல்லை. நான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்”

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments