Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்``இந்தியாவின் ஆன்மிகத் தலைநகர் `தமிழ்நாடு'... மோடியின் குறிக்கோள் இதுதான்!" - ஆளுநர் ஆர்.என்.ரவி

“இந்தியாவின் ஆன்மிகத் தலைநகர் `தமிழ்நாடு'… மோடியின் குறிக்கோள் இதுதான்!" – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னையில் நடைபெற்ற மீன்வளத்துறை கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஆளுநர் ரவி, “தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம். இந்தியாவை நம்பர் ஒன் நாடாக்கும் குறிக்கோளுடன் பிரதமர் பணியாற்றுகிறார். இதனால்தான் `ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனக் கூறுகிறார்.

மோடி

இந்தியா 150 நாடுகளுக்கு தடுப்பூசி கொடுத்திருக்கிறது. இதுதான் புதிய இந்தியா. இந்தியா ஒரு இலக்குடன் செயல்பட்டு வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை மாற்றுவதுதான் நமது இலக்கு. உலகின் முதன்மையான நாடாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்தியா பெற்றிருக்கிறது” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments