இந்தியாவின் ஒவ்வொரு அடி இடத்தையும் பாதுகாப்போம்: சீனா விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி

இந்திய சீன எல்லைப் பகுதியான கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடன் நடைபெற்ற சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, ‘நம்முடைய ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகப் போகாது என்று இந்த நாட்டு மக்களிடம் உறுதியளிக்க நான் விரும்புகிறேன். ஒற்றுமை மற்றும் இந்தியாவின் இறையான்மை என்பது நமக்கு மிகவும் முக்கியது. இந்தியாவுக்கு தேவை அமைதி. ஆனால், இந்தியா தூண்டப்பட்டால் அது தக்கபதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது.

இந்தியாவுக்காக உயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்துடன் இந்த ஒட்டுமொத்த நாடும் உள்ளது. இந்தியா அதனுடைய பிராந்தியத்தின் ஒவ்வொரு அடியையும் பாதுகாக்கும். இந்தியா அமைதியை விரும்பும் நாடும். அது அண்டை நாடுகளுடன் எப்போதும் அமைதியும், நட்பையும் கடைபிடிக்கவே விரும்புகிறது.

எப்போதெல்லாம் சூழ்நிலை அசாதாரணமாக உள்ளதோ, அப்போதெல்லாம் நாம் ஒன்றாக இருந்து நம்முடைய பலத்தை காண்பித்துள்ளோம். சீனப்படைகளுக்கு தக்க பதிலடி கொடும் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.