வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: தான் இருக்கும்வரை மேற்குவங்கத்திற்காக உழைப்பேன் எனத்தெரிவித்துள்ள அம்மாநில முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, இந்தியாவிற்கு மேற்குவங்கம் வழிகாட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா கூறியதாவது: மற்ற மாநிலங்களை விட மேற்குவங்கம் சிறந்தது. இன்று உத்தரபிரதேசத்தில் சிறுமிகள் நீதி கேட்கச் சென்றால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். ஆனால் இங்கே நாம் அப்படிச் செய்வதில்லை. எனது சொந்த கட்சியை சேர்ந்தவர்களானாலும் நான் அவர்களை விட்டு வைக்க மாட்டேன். ஆனால் சிலர் தொடர்ந்து போலியான வீடியோக்களை பரப்புகிறார்கள். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று நான் கவலைப்படுவதில்லை. எனது மக்களுக்கான ஜனநாயகத்தின் மீது எனக்கு அக்கறை உள்ளது.
துர்கா பூஜையை கொண்டாடுபவர்களும் ரம்ஜானை கொண்டாடுகிறார்கள். எல்லா பண்டிகைகளையும் ஒன்றாக ஒருங்கிணைந்து கொண்டாடுகிறோம். நமது திரிணமுல் அரசு பதவியேற்று 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த 11 ஆண்டுகளில் நான் என்ன செய்தேன் என யாருக்காவது தைரியம் இருந்தால் சவால் விடலாம். எனக்கு எதிராகப் பேசி, தவறாக வழிநடத்தி, சதித்திட்டம் தீட்டுவதில் எந்தப் பயனும் இல்லை. அரசியல் செய்ய சமூகப்பணி செய்ய வேண்டும். நான் இருக்கும்வரை மேற்குவங்கத்திற்காக உழைப்பேன் என்று எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் முன் மீண்டும் உறுதியளிக்கிறேன். இந்தியாவிற்கு மேற்குவங்கம் வழிகாட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement