பனியால் சூழப்பட்ட அந்த மலைப்பகுதியில் இந்தியா – சீனா வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திரும்பி செல்லுங்கள், சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் கூச்சலிடுகின்றனர். எனினும், ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுகிறது.
இப்படி, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டிருந்த நிலையில், இந்திய வீரர்களால் தாக்கப்பட்ட ஒரு சீன வீரருக்கு எதுவும் ஆகவில்லையே என இந்திய அதிகாரி கேட்கிறார். எனினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்றும், எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே, இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கல்வான் எல்லையில் இந்தியா – சீனா இடையே போர் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மத்தியில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
படிக்கஉடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?
எல்லையில் படைகளை விலக்கி கொள்வது குறித்து இருதரப்பு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும், கிழக்கு லடாக் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பிரச்னைக்குரிய இடங்களில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் ராணுவம் விளக்கமளித்துள்ளது. இதனிடையே, டெல்லியில் இருந்து ராணுவ தலைமை தளபதி நரவனே விமானம் மூலம் லே புறப்பட்டுச் சென்றார். அங்கு இரு நாட்கள் தங்கி படைகளின் ஆயத்த நிலை மற்றும் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை பற்றி ஆய்வு செய்ய உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.