இந்தியா மீது சீனாவின் சீண்டல்கள் என்னென்ன? – News18 Tamil

1990களின் இறுதி தொடங்கி, அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் அருணாச்சல பிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா.

2009-ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு புத்தமத தலைவர் தலாய்லாமா சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்து சீனாவுக்கு செல்பவர்களுக்கு, சீன அரசு தனி விசா வழங்கத் தொடங்கியது.

டெல்லியில் உள்ள சீன தூதரும், தூதரக அதிகாரிகளும் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்வதை நிறுத்திக்கொண்டனர். அதேபோல், இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு நிகழ்வுகள் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பட்சத்தில், அதில் கலந்துகொள்வதை சீன ராணுவ அதிகாரிகள் தவிர்த்தனர்.

2010-ம் ஆண்டில் அப்போதைய சீன அதிபர் வென் ஜியாபோ இந்தியா வந்திருந்த போது, சீன அரசின் அதிகாரப்பூர்வமான தொலைகாட்சி, இந்திய நில பரப்பில் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் நீளத்தை வேண்டுமென்றே குறைத்து அறிவித்தது.

2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றிருந்த சமயம், சீன அரசு தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்ட இந்திய வரைபடத்தில், காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம்பெறவில்லை.

2017-ம் ஆண்டு, தலாய்லாமா மீண்டும் தவாங் சென்றபோது, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அருணாச்சல பிரதேசத்தின் 6 முக்கிய இடங்களின் பெயர்களை மாற்றி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டது. 2019-ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசமும், தைவானும் இடம்பெறாமல் அச்சிடப்பட்ட 30,000 சீன வரைபடங்களை அந்நாட்டு அரசு ஒட்டுமொத்தமாக அழித்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீன அரசின் புவியியல் துறையால் வெளியிடப்பட்ட டிஜிட்டல் வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்து பகுதியாக காட்டப்பட்டது.

தற்போது லடாக் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்டுள்ள அத்துமீறல் ஜம்மு காஷ்மீருக்கு உட்பட்ட அக்சாய்சின் பீடபூமி முழுவதும் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவிக்கவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.