இதையடுத்து, மாலை 5 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையேற்றார். இதில், அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர். அதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
படிக்கஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரான சீன நிறுவனத்தை நீக்க முடியாது – பி.சி.சி.ஐ திட்டவட்டம்
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழையவில்லை என தெரிவித்தார்.
இந்திய – சீன ராணுவ வீரர்களின் மோதலின்போது, இந்திய நிலைகள் எதையும் சீன ராணுவம் கைப்பற்றவில்லை எனக் கூறிய பிரதமர் மோடி, எல்லையில் ஊடுருவ முயன்றவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் நமது ராணுவத்திற்கு இருப்பதாகவும், புதிதாக கட்டப்பட்டுள்ள நிலைகளால், இந்திய ராணுவத்தின் கண்காணிக்கும் திறன் கூடியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
I thank leaders from all parties, who gave their valued opinions during today’s all-party meet.
Here are my remarks at the meeting… pic.twitter.com/g9FUADU0Ua
— Narendra Modi (@narendramodi) June 19, 2020
மேலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என்று கூறிய அவர், எந்த நடவடிக்கைக்கும் ராணுவம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.