Thursday, June 30, 2022
Homeஉலக செய்திகள்இந்திய எல்லை அருகே 3 செல்போன் டவர்களை நிறுவிய சீனா! - புகைப்படங்களை வெளியிட்ட கவுன்சிலர்...

இந்திய எல்லை அருகே 3 செல்போன் டவர்களை நிறுவிய சீனா! – புகைப்படங்களை வெளியிட்ட கவுன்சிலர் | China has installed mobile towers ‘very close’ to Indian territory says officials

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய எல்லைக்கு மிக அருகில் சீனா 3 செல்போன் டவர்களை நிறுவியுள்ளதாக லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள தர்புக் தாலுகாவில் அமைந்திருக்கும் சுஷூல் பகுதியின் கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ”பாங்காங் ஏரியின் மீது பாலம் கட்டி முடித்த பிறகு, இந்திய எல்லைக்கு மிக அருகில் 3 செல்போன் டவர்களை சீனா நிறுவியுள்ளது. மக்கள் வசிக்கும் கிராமங்களில் 4ஜி வசதி கூட இல்லை. எனது தொகுதியில் உள்ள 11 கிராமங்களில் 4ஜி வசதி இல்லை” என தெரிவித்துள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments