இந்திய சினிமா ஒன்று தான் – ரன்வீர் சிங்

இந்திய சினிமா ஒன்று தான் – ரன்வீர் சிங்

12 மே, 2022 – 14:25 IST

எழுத்தின் அளவு:


All-India-cinema-are-same-says-Ranveer-singh

இந்தியத் திரையுலகம் மாநில மொழிகளில் பிரிந்து கிடக்கிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என படங்களை எடுத்தாலும் இத்தனை காலமாக ஹிந்தி சினிமாவைத்தான் இந்திய சினிமா என்று அழைத்து வந்தார்கள்.

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு அந்த நிலை மாற ஆரம்பித்தது. கடந்த சில மாதங்களில் ‘புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2’ ஆகிய தென்னிந்தியப் படங்கள் பான்-இந்தியா படமாக வெளிவந்து தென்னிந்தியப் படங்களும் இந்தியப் படங்கள் தான் என்பதை அழுத்தமாக நிரூபித்தன.

இது தொடர்பாக சில பல சர்ச்சைகளும் எழுந்தன. இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் ‘இந்திய சினிமா ஒன்றுதான்’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், “எனக்கு தெலுங்கு தெரியாது, நான் ‘புஷ்பா’ பார்த்தேன், ‘ஆர்ஆர்ஆர்’ பார்த்தேன். அந்தப் படங்கள், அந்தக் கலை என்னை வியக்க வைத்தது. இக்கலையில் உள்ள திறமைகளை நான் பாராட்டுவேன். விதவிதமான ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் படங்களைத் தரும் அவர்களது திறமை பெருமையான ஒன்று. அப்படங்களை வேறு ஒருவரது படங்கள் என நான் நினைக்கவில்லை. அவை எல்லாமும் நமது படங்கள் தான். இந்திய சினிமா ஒன்றுதான்.

நான் ஒரு நடிகன். சினிமாவின் வியாபாரத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள நான் வியாபாரியோ அல்லது தயாரிப்பாளரோ அல்ல. நான் பணம் வாங்கி நடிக்கும் ஒரு நடிகன். கேமரா முன்பாக எனது கலையைக் காட்டுபவன், அதற்கு ஒரு எல்லை உண்டு. அந்தப் படங்கள் எல்லாம் உண்மையிலேயே சிறந்த படங்கள்தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து,” என்று தென்னிந்தியப் படங்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.Source link

Leave a Comment

Your email address will not be published.