உங்கள் வயதென்ன என்ற கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியும். ஆனால் தென் கொரியா மக்கள் வயதைக் கணக்கிடும் முறையைக் கேட்டால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
நம் வழக்கத்தில், குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை பிறந்த அதே தேதி அடுத்த ஆண்டு வரும்போது ஒரு வயது என மதிப்பிடுவோம். ஆனால் தென் கொரியாவில் வேறு முறையைப் பின்பற்றுகின்றனர். அதாவது ஒன்பது மாதங்கள் குழந்தை, தாயின் வயிற்றில் இருப்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
குழந்தை பிறந்த அன்றே அந்தக் குழந்தைக்கு வயது ஒன்று. உதாரணத்திற்கு, ஒரு குழந்தை டிசம்பர் மாதத்தில் பிறக்கிறது என்றால் பிறந்த நாளன்றே அந்தக் குழந்தையின் வயது ஒன்று. ஜனவரி மாதம் தொடங்கியதும் அதன் வயது இரண்டாகிவிடும்.