அசோக் நகர், “
தன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 20 வயது இளம்பெண்ணை, துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.பீஹாரை சேர்ந்தவர் அனில் ரவிசங்கர் பிரசாத், 45. டைல்ஸ் கடை வைத்துள்ளார். அசோக் நகரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மார்ச் மாதம், மேற்கு வங்கத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், வாடகைக்கு குடிவந்தார்.இளம்பெண் வீட்டுக்கு, அவரது ஆண் நண்பர்கள் அவ்வப்போது வந்து செல்வர். இது தொடர்பாக, இளம் பெண்ணுக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு நாள் அவரது நண்பர், இளம்பெண் வீட்டில் தங்கி மறுநாள் காலை சென்றுள்ளார்.இதை கவனித்த உரிமையாளர், அந்நபரை கண்டித்து, மீண்டும் இங்கு வந்தால் போலீசில் புகார் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், தன் பெற்றோரிடம் கூறுவதாக தெரிவித்தார்.கோபமான வீட்டு உரிமையாளர், இளம்பெண் வீட்டுக்குள் சென்று, துப்பாக்கியை அவரின் நெற்றியில் வைத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டியுள்ளார்.இதனால் யாரிடமும் கூறாமல் இருந்தார். சமீபத்தில் இது குறித்து பெற்றோரிடம், இளம்பெண் தெரிவித்தார். மேற்கு வங்கத்திலிருந்து வந்த அவரது பெற்றோர், நேற்று அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ரவிசங்கர் பிரசாத் கைது செய்யப்பட்டார்.
Advertisement