Friday, June 17, 2022
Homeஅரசியல் செய்திகள்இவங்க எக்காலமும், மதுக்கடைகளை மூடவே மாட்டாங்க| Dinamalar

இவங்க எக்காலமும், மதுக்கடைகளை மூடவே மாட்டாங்க| Dinamalar

காந்தி பேரவை தலைவரும், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் அறிக்கை:தி.மு.க., ஆட்சியில் படிப்படியாக மதுக் கடைகளை மூடி, முழு மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்ற, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ‘பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு வரும்’ என, அமைச்சர் துரைமுருகன் கூறியது, தி.மு.க., அரசு தொடர்ந்து மது விற்கும் என்று தானே பொருள். முதல்வர் ஸ்டாலின் உடனே மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

இவங்க எக்காலமும், மதுக்கடைகளை மூடவே மாட்டாங்க. பேசாம நீங்க, பா.ம.க.,வுடன் கூட்டணி வச்சு, அக்கட்சியை ஆட்சியில் அமர்த்த முயற்சி செஞ்சு பாருங்க!

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: மதுரை மருத்துவ கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு, ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்கு மாற்றாக, ‘மகரிஷி சரகர்’ உறுதிமொழியை ஏற்றுக் கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.சரகரின் தத்துவமானது, மன்னரால் வெறுக்கப்படுவோருக்கோ, கணவர் இல்லாமல் மனைவிக்கோ மருத்துவம் அளிக்கக் கூடாது என்பதாகும். இந்த பிற்போக்கு தத்துவம், டாக்டர்களின் உறுதிமொழியாக இருக்கக் கூடாது.

உறுதிமொழி ஏற்றவர்கள் அதன்படி செயல்பட வேண்டும் என்றால், ‘நேர்மையான நிர்வாகத்தை தருவேன்’ என பதவி பிரமாணம் எடுத்த மக்கள் பிரதிநிதிகள், அதன்படி செயல்படுகின்றனரா என்ன?

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: கைது என்ற மிரட்டலால், அரசியல் எதிரிகளை பணிய வைத்து விடலாம் என்ற பா.ஜ.,வின் திட்டத்தை, அசாம் நீதிமன்றம் தவிடுபொடியாக்கி உள்ளது. குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானிக்கு நியாயம் வழங்கியுள்ளது. பா.ஜ.,வை எதிர்த்த ஒரே காரணத்துக்காக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு, அசாம் நீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளித்திருக்கிறது. இது, ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த வெற்றி.

latest tamil news

தன் அரசியல் எதிரிகளை பந்தாட, ‘எமர்ஜென்சி’யை கொண்டு வந்த இந்திராவின் கட்சியில் இருக்கும் நீங்களா, இப்படி பேசுவது?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக போலீசாரின் முதல் கட்ட சோதனையில், கஞ்சா, குட்காவுடன், 8,929 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று மாதங்கள் கழித்து, இரண்டாவதாக நடத்திய சோதனையில் ஒட்டு மொத்தமாக, 8,742 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர், முதற்கட்ட சோதனையிலும் கைது செய்யப்பட்டவர்களாகவே இருக்கலாம். போலீசார் நினைத்தால், மூன்று நாட்களில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

கைது பண்ணி, ரிலீஸ் பண்ணி, மறுபடியும் கைது பண்ணி, ‘ரிப்பீட்டு’காட்டுறதுல நம்ம போலீசை அடிச்சுக்கவே முடியாது!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments