Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்உத்தரகண்ட் இடைத்தேர்தல் முதல்வர் வேட்புமனு தாக்கல்| Dinamalar

உத்தரகண்ட் இடைத்தேர்தல் முதல்வர் வேட்புமனு தாக்கல்| Dinamalar

டேராடூன் : உத்தரகண்டில், சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

உத்தரகண்டில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 47 இடங்களை கைப்பற்றி, பா.ஜ., ஆட்சியை தக்க வைத்தது. எனினும், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி, காங்., வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இருந்தும், மார்ச் 23ல் அவர் முதல்வராக பதவியேற்றார்.இதையடுத்து, தாமி ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆக வேண்டியது கட்டாயமாகி உள்ளது.

இந்நிலையில், அவர் போட்டியிட ஏதுவாக, சம்பாவத் தொகுதி எம்.எல்.ஏ., கைலாஷ் சந்திர கட்டோரி, தன் பதவியை ராஜினாமா செய்தார். வரும் 31ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள இத்தொகுதியில் போட்டியிட, தாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இது பற்றி முதல்வர் தாமி கூறியதாவது:கடவுளின் ஆசிர்வாதத்துடன், சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இத்தொகுதி மக்கள், எனக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் வளர்ச்சிக்காக, என்னையே அர்ப்பணித்து பணியாற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்
.வரும் 31ம் தேதி பதிவாகும் ஓட்டுகள், ஜூன் 3ம் தேதி எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments