உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்!

லடாக் பிராந்தியத்தில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு சீன படை உடன் நடந்த மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதில், தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் உயிரிழந்தார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீன இராணுவம் தாக்கியதில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், வீரமரணம் எய்திய பழனி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

லடாக் எல்லைத் தாக்குதலில் இன்னுயிர் ஈந்த இந்திய ராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம் செலுத்துவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி, தனது உயிரையும் ஈந்துள்ள பழனி குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார்.

Also read… ஸ்டாலின் தன்னை அரசியலிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டால் மக்களுக்கு நல்லது… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.