Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்உரத்தட்டுப்பாடு போக்க நடவடிக்கை; வேளாண் அமைச்சர் உறுதி| Dinamalar

உரத்தட்டுப்பாடு போக்க நடவடிக்கை; வேளாண் அமைச்சர் உறுதி| Dinamalar

காரைக்கால் : உரம் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக் குமார் தெரிவித்தார்.காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 60 டன் எடை மேடை புதுப்பிக்கப் பட்டது. இதை நேற்று வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் திறந்து வைத்து, குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாக தியாகராஜன் முன்னிலை வகித்தனர்.

கூடுதல் வேளாண்துறை இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார்.துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ், ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலர் ஜெயந்தி, வேளாண் கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசுகையில், ‘காரைக்காலில் உரம் தட்டுபாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். வேளாண் துறையில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். வடிகால் வாய்க்கால், ஆறுகள் துார் வாரும் பணி விரைவில் தொடங்கப்படும்’ என குறிப்பிட்டார்.

அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில், எதிர்கட்சி எம்.எல்.ஏ., நாஜிம் பாராட்டும் அளவிற்கு எங்கள் அரசு அமைந்துள்ளது. கடந்த ஓராண்டில் பல சாதனைகள் செய்துள்ளோம். வரும் நான்கு ஆண்டுகளில் இன்னும் பல சாதனைகள் புரிவோம் என’ கூறினார்.நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., பேசும்போது, காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து வாய்கால்களையும் துார் வாரும் பணியை தொடங்க வேண்டும். பயிர் காப்பீடு தொகை விரைவில் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இடுபொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments