Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்உரை நிகழ்த்திய அதிகாரிக்கு தண்ணீர் கொடுத்த அமைச்சர்| Dinamalar

உரை நிகழ்த்திய அதிகாரிக்கு தண்ணீர் கொடுத்த அமைச்சர்| Dinamalar

மும்பை,-மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், சிறப்புரை ஆற்றிய அதிகாரிக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தண்ணீர் கொடுத்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் மும்பையில் சமீபத்தில், என்.எஸ்.டி.எல்., எனப்படும், ‘நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்’ என்ற பொதுத் துறை நிறுவனத்தின் வெள்ளி விழா நடந்தது.இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில், என்.எஸ்.டி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு சிறப்புரை ஆற்றினார். அப்போது, அவர் பேசுவதற்கு சற்று சிரமப்பட்டார். பின், உரையை நிறுத்தி, தண்ணீர் தருமாறு அருகிலிருந்த ஊழியரிடம் கேட்டார்.அப்போது, சிறிதும் யோசிக்காத அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று, பத்மஜாவுக்கு தண்ணீர் கொடுத்தார். பின், அவருக்கு பத்மஜா நன்றி தெரிவித்தார்.

இந்தக் காட்சி அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தண்ணீர் பாட்டிலை பத்மஜாவுக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்ததும், அங்கிருந்தோர் கைதட்டி பாராட்டு தெரிவிக்கும் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments