ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,“ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம், சிறந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவைகள் வழங்கும். அயோத்தி உட்பட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களுக்கு குளிரூட்டப்பட்ட ரயில்களில் முதியவர்களுக்கு இலவச யாத்திரை வழங்கப்படும்.
பாஜக பணக்காரர்களின் கட்சி. பணக்காரர்களுக்காக பெரிய விலையுயர்ந்த பள்ளிகளை கட்டி கொடுக்கும். குஜராத்தில் 27 ஆண்டுகளில் பாஜக ஏழை மற்றும் நடுத்தரக் குழந்தைகளுக்காக எத்தனை பள்ளிகளைக் கட்டியது. ஏழைக் குழந்தைகளின் 6000 அரசுப் பள்ளிகளை பாஜக மூடியது.
டெல்லி அரசு 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சரிசெய்து, ஏழைக் குழந்தைகளுக்காக நல்ல எதிர்காலத்தைக் கொடுத்துள்ளது. பாஜக தலைவர்கள் ஊழல் செய்வதால், பாஜக அரசாங்கம் இலவச மின்சாரம் வழங்க முடியாது. இலவச மின்சாரம் வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்குகிறோம்” என்றார்.