Saturday, July 2, 2022
Homeஅரசியல் செய்திகள்``எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்!" - தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அதிமுக | In Puducherry, ADMK...

“எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்!” – தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அதிமுக | In Puducherry, ADMK resolution as Edappadi Palanisamy is the General secretary

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர கழகம் மற்றும் தொகுதி கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அந்த தீர்மானத்தில், “மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழக ஒற்றுமை கருதி, கழகத்துக்கு இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. கழக முதல்வர் வேட்பாளர் தேர்வு, எதிர்கட்சித் தலைவர், ராஜ்ய சபா உறுப்பினர் தேர்வு, கழக வளர்ச்சி உள்ளிட்ட பிரதான பல்வேறு முடிவுகளை எடுக்கும்போது இரட்டைத் தலைமையினால் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டது.

அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

அதிமுக – பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி

கழகத்தின் எதிர்கால நலன் கருதி தற்போதிருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் என்ற இரட்டைத் தலைமையை மாற்றி, கழகத்துக்கு ஒரே தலைமையாக கழக பொதுச்செயலாளர் பதவியை 23-6-2022 அன்று சென்னையில் நடைபெற உள்ள கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வரவேண்டும் என புதுச்சேரி மாநில கழகம் தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்யும் மக்கள் விரோத திமுக அரசை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணப்படி, உறுதியாக எதிர்ப்பதில் பிரச்னை இருக்கிறது.

அதிமுக தொண்டர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கழகத்தின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்வது என புதுச்சேரி மாநில கழகம் முடிவெடுத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments