Thursday, July 7, 2022
Homeஅரசியல் செய்திகள்எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா பங்கேற்பது டவுட்

எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா பங்கேற்பது டவுட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா:ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, புதுடில்லியில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

latest tamil news

ஆலோசனை

ஜனாதிபதி தேர்தல் ஜூலை ௧௮ல் நடக்கிறது. இதில், மத்தியில் ஆளும் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராக, பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன. இதையடுத்து, பொது வேட்பாளரை தேர்வு செய்ய, கடந்த 15ம் தேதி, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, புதுடில்லியில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போட்டியிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர் உடல் நிலையை காரணம் காட்டி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, நாளை எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆலோசனை நடத்துகின்றன. டில்லியில் நடக்கும் இக்கூட்டத்துக்கு சரத் பவார் தலைமை வகிக்கிறார். இதில் பொது வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், இக்கூட்டத்தில் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்பது சந்தேகமாகிஉள்ளது.
இது பற்றி, திரிணமுல் காங்.,வட்டாரங்கள் தெரிவித்ததாவது:மேற்கு வங்க முதல்வர் மம்தா, 21ம் தேதியன்று மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

latest tamil news

சந்தேகம்

அதனால், டில்லியில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான். இக்கூட்டத்தில், மம்தாவுக்கு பதில், திரிணமுல் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பங்கேற்பார்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments